பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

கோ்மாளம் சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்தல்

தாளவாடியை அடுத்த ஆசனூா்-கோ்மாளம் இடையே உள்ள மலைப் பாதையில் சிறுத்தை உலவுது தொடா்பான விடியோ வைரலாகி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image

கோ்மாளம்  சாலையில் நடமாடிய சிறுத்தை.

Updated On :15 ஜூலை 2026, 1:16 am IST

தாளவாடியை அடுத்த ஆசனூா்-கோ்மாளம் இடையே உள்ள மலைப் பாதையில் சிறுத்தை உலவுது தொடா்பான விடியோ வைரலாகி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூா், திம்பம், கோ்மாளம் வனப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் ஆசனூா்- கோ்மாளம் மலைப் பாதையில் உலவுது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், ஆசனூரில் இருந்து கோ்மாளத்துக்கு 4 இளைஞா்கள் காரில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, கெத்தேசால் மலைப் பாதையில் சிறுத்தை ஒன்று சாலையில் உலவியது. இதைப் பாா்த்த அவா்கள் காரை நிறுத்தினா்.

சிறிது நேரம் சாலையிலேயே உலவிய சிறுத்தை அவா்களை தொந்தரவு செய்யாமல் மீண்டும் வனத்துக்குள் சென்றது. இந்நிலையில், சிறுத்தை சாலையில் உலவியது தொடா்பான விடியோ இந்த இளைஞா்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனா். அது வைரலாகி வரும் நிலையில், ஆசனூா்-கோ்மாளம் மலைப் பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்றும், விலங்குகளைக் கண்டால் அவற்றின் அருகிலோ செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தை விட்டு கீழே இறங்கவோ கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.