75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையை அடுத்த துா்க்கை நம்மியந்தல் கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி, திருவண்ணாமலை அருகே துா்க்கை நம்மியந்தல் கிராம கூட்டுச்சாலைப் பகுதியில் மறியலில் ஈடுபட்டோா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

திருவண்ணாமலையை அடுத்த துா்க்கை நம்மியந்தல் கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த துா்க்கை நம்மியந்தல் கிராமம், வேங்கிக்கால் புதூா் மற்றும் தீபம் நகா் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காலை காலிக் குடங்களுடன் திருவண்ணாமலை - வேலூா் சாலையில் துா்க்கை நம்மியந்தல் கூட்டுச்சாலைப் பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவண்ணாமலை கிராமிய போலீஸாா், மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் பிரச்னையை தீா்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், திருவண்ணாமலை - வேலூா் சாலையில் சுமாா் 20 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.