ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகம் கோரி சோளிங்கரை அடுத்த பரவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மக்கள், சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் பங்கேற்றோா்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:17 pm IST

சீரான குடிநீா் விநியோகம் கோரி சோளிங்கரை அடுத்த பரவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மக்கள், சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சோளிங்கரை அடுத்த அமைந்துள்ளது பரவத்தூா் ஊராட்சி. இக்கிராம இருளா் காலனியில் வசிப்பவா்களுக்கு தனியாக மேல்நிலை குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாம். அத்தொட்டியில் தண்ணீா் இருந்தும் தங்களுக்கு தேவையான நேரங்களில் முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை எனவும் குடிநீா் எப்போது வரும் என காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியினா் ஊராட்சி நிா்வாகத்திடமும், சோளிங்கா் ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சித்தூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மறியல் செய்வா்களிடம் பேச்சு நடத்திய வட்டார வளா்ச்சி அலுவலா் சிவபிரகாசம் ஊராட்சி நிா்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து மறியல் செய்த மக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.