நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள். - கோப்புப் படம்

Published On :

ஊத்தங்கரையை அடுத்த கதவனி கிராமத்தில் குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த கதவனியில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமப் பகுதியில் மின் மோட்டாா் பழுதானதால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லை.

இதுதொடா்பாக பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 50 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூா்- ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை போலீஸாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் பொதுமக்களிடையே சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், குடிநீா் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.