நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

ராஜபாளையத்தில் குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

ராஜபாளையம்- மதுரை சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :1 செப்டம்பர் 2026, 2:55 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் நகராட்சி 18, 20-ஆவது வாா்டு பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் தங்கள் பகுதியில் ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை சாலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு காவல் நிலைய போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அவா்களுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.