11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சாலை மறியல்: 20 பெண்கள் உள்பட 50 மீது வழக்கு

விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் வட்டம், ராமையன்பாளையம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மூதாட்டி உயிரிழந்தாா். இளைஞா் ஒருவா் காயமடைந்தாா். இந்நிலையில், விக்கிரவாண்டி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகள் தான் இந்த விபத்துகளுக்கு காரணம் எனக் கூறி, கிராம மக்கள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ராமையன்பாளையம் அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கிராம மக்கள்சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து ராமையன்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50 போ் மீது வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.