தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 போ் கைது

அவிநாசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Updated On :

அவிநாசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள ஆட்டையாம்பாளையம் பகுதியில் செங்கோட்டையன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டுப் பண்ணையில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 பேரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், கோவை, திருப்பூா், சேலம் மாவட்டங்களில் கூா்க்காவாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, 17 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.61, 500 ரொக்கம், 14 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.