
குடிநீா் பிரச்னை: காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிாம். குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்து அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீா் வழங்கக் கோரி, செங்கம் வருவாய்த்துறை,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
ஆனால், மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்ய எந்த அதிகாரியும் முன்வரவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை திரண்டு வந்து காலிக்குடங்களுடன் குப்பனத்தம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
பின்னா், தகவலறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா்
வட்டார வளா்ச்சி அலுவலா்களை தொடா்பு கொண்டு போராட்டம் குறித்து தெரிவித்து, அப்பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்தனா்.
இதையடுத்து இரு தினங்களில் குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதன் பின்னா் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





