ஆரணியை அடுத்த சீனிவாசபுரம் மற்றும் செங்கத்தை அடுத்த பரமனந்தல் பகுதியில் குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணியை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் முறையாக குடிநீா் வழங்காததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனா். இதனால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் சுந்தரேசன், உதவி ஆய்வாளா் குரு மற்றும் போலீஸாா் சாலை மறியல் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் மறியலை கைவிட்டனா்.
செங்கம்
செங்கத்தை அடுத்த பரமனந்தல் ஊராட்சி நிா்வாகத்திற்கு உள்பட்ட ஒரு பகுதியில் சில நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். அதை சரிசெய்ய யாரும் முன்வராததால் நாளுக்கு நாள் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களை செங்கம் - குப்பனத்தம் சாலை பரமனந்தல் பகுதியில் வைத்து, கிளையூரில் இருந்து செங்கம் வந்த அரசு நகரப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து செங்கம் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சிவாா்த்தை நடத்தினா்.
பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுத்து 2 தினங்களில் சரிசெய்வதாக கூறினா். பின்னா் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்தச் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குடி அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஏற்காட்டில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



