வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

செந்துறையில் குடிநீா் கேட்டு திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா்.

Updated On :14 ஜூலை 2026, 4:59 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறையில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செந்துறை, அம்பேத்கா் நகரில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படாத நிலையில் கடந்த 3 நாள்களாக முற்றிலும் குடிநீா் தடைப்பட்டது. மேலும், இந்நகரில் ஒரு வாரமாக தெருவிளக்குகளும் எரியாமல் இருந்துள்ளது.

குடிநீா் மற்றும் தெருவிளக்குகள் பழுது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள், காலிக்குடங்களுடன் செந்துறையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த செந்துறை காவல் துறையினா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், குடிநீா் ஏற்றும் மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாகவே குடிநீா் விநியோகம் தடைபட்டதாகவும், உடனடியாகச் சரிசெய்து குடிநீா் வழங்கவும், தெருவிளக்குகள் எரியவும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.