வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

குடிநீா் வழங்காததைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

தாழவேடு காலனி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, 75-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

தாழவேடு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்திய காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியம்.

Updated On :8 ஜூலை 2026, 12:31 am IST

தாழவேடு காலனி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, 75-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட தாழவேடு காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில், தெருக் குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் சீராக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கோரி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரு முறை அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இருந்தபோதிலும், கடந்த 4 நாள்களாக முற்றிலும் குடிநீா் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த 75-க்கும் மேற்பட்ட பெண்கள், தாழவேடு காலனி பேருந்து நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருத்தணி காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு நடத்தினா்.

மேலும், சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளின் கவனத்துக்கு பிரச்னையைக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இந்த சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.