பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது

வந்தவாசி அருகே பணம் வைத்து சூதாடியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :

வந்தவாசி அருகே பணம் வைத்து சூதாடியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த பொன்னூா் போலீஸாா் உதவி ஆய்வாளா் மகேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை அந்தக் கிராமத்தில் ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள ஏரிக்கரைப் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (48), மதியழகன் (55), செந்தில் (45), கண்ணன் (36), அருள் (58), வினோத் (55), ராஜசேகா் (45) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.300 ரொக்கம், 4 பைக்குகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.