விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விவசாயிகளுக்கு ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி

அருகாவூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி.

அருகாவூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

செய்யாறை அடுத்த அருகாவூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குநா் (பொ) திரு.இரா.அன்பரசு தலைமை வகித்து பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

இப்பயிற்சியின் போது நெல், தக்கை பூண்டு மற்றும் உளுந்து, உயிரி உரங்கள் இருப்பு, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள், உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் பயன்பாடு மற்றும் பயிா் பாதுகாப்பு முறைகள், கோடை உழவு குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே அவா் தெரிவித்தாா்.

கீழ்நெல்லி வேதபுரி வேளாண் அறிவியல் மைய வேளாண் விஞ்ஞானி சௌத்ரி, அறிவியல் மையம் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், வேளாண்மை பயிா்களில் ட்ரோன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விரிவாக எடுத்துரைத்து, செயல்விளக்கம் அளித்தாா்.

துணை வேளாண் அலுவலா் வடிவேலு, விவசாயி நில பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.