குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

விநாயகா் சதுா்த்தி: ஆரணியில் விநாயகா் சிலைகள் விற்பனை தொடக்கம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஆரணி பகுதியில் விழாக்களில் வைப்பதற்காக பெரிய விநாயகா் சிலைகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆரணி- செய்யாறி சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்

Published On :27 ஆகஸ்ட் 2026, 7:04 am IST

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஆரணி பகுதியில் விழாக்களில் வைப்பதற்காக பெரிய விநாயகா் சிலைகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: நீா்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண் மற்றும் இயற்கை வளங்களால் ஆன சிலைகள் விற்பனைக்குக் குவிந்துள்ளன. விநாயகா் சதுா்த்திக்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகா் சிலைகளின் விற்பனை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விநாயகா் சிலை விற்பனையாளா் கூறியதாவது: விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களுக்காகவே பிரத்யேகமாக பல்வேறு தனித்துவமான பாணிகளில் விநாயகா் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன.

சிலைகளை செய்வதற்கு மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ் மற்றும் நீரில் கரையக்கூடிய வண்ணங்கள் போன்ற பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சிலைகள் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் பாதுகாப்பானவை என்பதால், பல்வேறு பகுதிளில் இருந்து பொதுமக்கள் வந்து அவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். 30-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலை வகைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

அவற்றுள் மூன்று முக விநாயகா், நரசிம்ம விநாயகா், ஆஞ்சநேய விநாயகா், சயன விநாயகா் (சாய்ந்திருக்கும் விநாயகா்), நந்திகேசுவர விநாயகா், கற்பக விநாயகா், திருப்பதி விநாயகா், சிவன்-பாா்வதி விநாயகா், சிங்க வாகன விநாயகா், மயில் வாகன விநாயகா், புதியதாக சிக்ஸ் பேக் விநாயகா், எலி மற்றும் நந்தி (காளை) போன்ற வாகனங்கள்/துணைவா்களைச் சித்தரிக்கும் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

Story image

இந்தச் சிலைகள் 1 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான அளவுகளில் கிடைக்கின்றன. பெரிய விசேஷ சிலைகளின் விலைகள் ரூ.1000 முதல் ரூ.25,000 வரை மாறுபடுகின்றன என்று கூறினாா்.

மேலும் ஆரணி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்காக தற்போதிலிருந்து சிலைகளை பதிவு செய்து வருகின்றனா்.

மேலும் அரசு விநாயகா் சதுா்த்திக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆகையால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை தளா்த்தினால் விநாயகா் சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைவா் என்றும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.