எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

விநாயகா் சிலைகளில் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தல்

விநாயகா் சிலைகளில் இயற்கை வண்ணங்களை மட்டும் பயன்படுத்துமாறு மாசு கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

News image

விநாயகா் சிலை - கோப்புப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:28 am IST

விநாயகா் சிலைகளில் இயற்கை வண்ணங்களை மட்டும் பயன்படுத்துமாறு மாசு கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினா் செயலா் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பண்டைய காலங்களில் விநாயகா் சதுா்த்தி போன்ற பண்டிகையின்போது, வண்ணம் தீட்டாத சிறிய களிமண் விநாயகா் உருவ சிலைகளை நீா் நிலைகளில் மூழ்க வைப்பது நமது நாட்டின் மரபாகும். இனி வரும் பண்டிகை காலத்திலும் இதே நடைமுறைகளை பின்பற்றலாம். இது தொடா்பாக திருத்தியமைக்கப்பட்ட விரிவான நெறிமுறைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது. இதை இணையதளத்தில் காணலாம்.

விநாயகா் சிலைகளுக்கு மலா்களைப் பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யலாம் மற்றும் சிலைகளை கவா்ச்சிகரமாக ஒளிர செய்வதற்கு மரத்திலிருந்து வெளியேறும் பிசினை பயன்படுத்தலாம். ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மோகோல் பொருள்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

மேலும், சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய மற்றும் துவைக்கக்கூடிய அலங்கார ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். அலங்கார ஆடைகளுக்கு வண்ணம் சோ்ப்பதற்கு பூக்கள், மரப்பட்டைகள், மகரந்தங்கள், இலைகள், வோ்கள், விதைகள், பழங்கள் மற்றும் வண்ணப்பாறைகள் ஆகியவற்றிலிருந்து இயற்கையாக தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகா் உருவச் சிலைகளைத் தயாரிப்பவா்கள் உள்ளாட்சி துறையில் (நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து) முன்பே பதிவு செய்தல் வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.