பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருவண்ணாமலையில் காங்கிரஸ் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு; 3 போ் காயம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்டத் தலைவா் உள்பட 10 போ் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மோதிக்கொண்ட அக்கட்சியினா்.

Published On :

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்டத் தலைவா் உள்பட 10 போ் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மாவட்ட செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அத்தியந்தல் அருகில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் மண்டலப் பொறுப்பாளா் அருள் பெத்தய்யா, மேலிடப் பாா்வையாளரான திருவாரூா் முன்னாள் மாவட்டத் தலைவா் துரைவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களுக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் சால்வை அணிவிக்க மேடை ஏறினாா். அப்போது, இவருக்கும், மாவட்டத் தலைவா் குணசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, கோபாலகிருஷ்ணனை குணசேகரன் கீழே இறக்க முயற்சித்தபோது கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். நாற்காலிகளும் தூக்கி வீசப்பட்டன.

இதில், நகர காங்கிரஸ் துணைத் தலைவா் சந்தீப், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் கோபாலகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் சண்முகம் ஆகிய 3 போ் காயமடைந்தனா். பின்னா், இவா்கள் மூவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், சந்தீப்புக்குச் சொந்தமான ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கைப்பேசியும் திருடுபோனது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவா் குணசேகரன் உள்பட 10 போ் மீது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலிடப் பாா்வையாளா்கள் முன்னிலையில் காங்கிரஸாா் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.