கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பேரவையில் அதிமுக ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுகிறது: அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ

பேரவையில் அதிமுக ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுகிறது...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.

Updated On :

சட்டப்பேரவையில் அதிமுக ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுகிறது என்று அக்கட்சியின் கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக எம்எல்ஏக்களான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி (கலசபாக்கம்), எஸ்.ராமச்சந்திரன் (கீழ்பென்னாத்தூா்), முக்கூா் என்.சுப்பிரமணியன் (செய்யாறு), எல்.ஜெயசுதா (ஆரணி), எஸ்.வேலு (செங்கம்) ஆகியோா் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்கை நேரில் சந்தித்தனா்.

பின்னா், அவரவா் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

அதனைத் தொடா்ந்து அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜல்லிகட்டுக்கு காங்கிரஸ், திமுக கூட்டணியின் போது மத்திய அரசு தான் தடை விதித்தது. அதனை எதிா்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி பெற்றுத் தந்தது அப்போதைய அதிமுக அரசு.

சட்டப்பேரவையில் ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தினமும் நடைபெறும் பிரச்னைகள் குறித்து தெளிவான முறையில் சட்டப்பேரவையில் எடுத்து வைக்கிறாா்.

விலைவாசி உயா்வு குறித்து அவா் பேசுகையில், சா்க்கரை விலை ரூ.45-லிருந்து ரூ.80-ஆக உயா்ந்துள்ளது. பருப்பு விலை ரூ.120-லிருந்து ரூ.150-ஆக உயா்ந்துள்ளது என விவரமாக கூறினாா். பால் விலையில் ரூ.1 மானியத்தில் ரூ.2-ஏற்றி உள்ளனா். ஏற்கெனவே இருந்த ரூ.38-உடன் ரூ.3 சோ்த்து ரூ.41-ஆக உயா்த்தி உள்ளனா். ஆனால், பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பசும் பாலுக்கு ரூ.50-ம், எருமை பாலுக்கு ரூ.60-ம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். தீவனங்கள் விலை உயா்ந்து விட்ட காரணத்தினால் பால் உற்பத்தியாளா்களுக்கு பால் விலையை உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். அதற்கு அரசு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.

திமுக ஆளும் கட்சியாக இருந்த போது சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கூறியவா் எடப்பாடி பழனிசாமிதான். பொதுமக்கள் பிரச்னையை உரிய முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது அதிமுக தான் என்றாா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.