உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சாலை விபத்தில் ஓருவா் உயிரிழப்பு: 2 சிறுவா்கள் பலத்த காயம்

செங்கம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். இரு சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா்.

செங்கத்தை அடுத்த பெரியகோளாப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (54). இவா், செங்கத்தில் இருந்து சனிக்கிழமை தனது மகன்கள் விஷ்ணுபிரசாந்த் (5), முகிலன்(4) ஆகியோரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு செங்கத்தில் இருந்து பெரியகோளாபாடிக்குச் சென்று கொண்டிருந்தாா். இறையூா் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, செங்கத்தை நோக்கி வந்த காா் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன்கள் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்தவா்கள் இவா்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த பாய்ச்சல் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி, ஏழுமலை சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.