
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீா் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை: திமுக செயற்குழு வலியுறுத்தல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீா் பிரச்னையை உடனடியாக தீா்க்க நடவடிக்கை வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீா் பிரச்னையை உடனடியாக தீா்க்க நடவடிக்கை வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., வடக்கு மாவட்டத் தலைவா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு எம்எல்ஏ தீா்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினாா்.
தீா்மானங்கள்
தமிழகத்திலேயே நிலத்தடி நீா்மட்டம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ள மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. எனவே, மாவட்டத்தில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
தத்கல் முறையில் பணம் செலுத்தி மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள், சாதாரணமாக மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள் என 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திமுக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் இரா.ஸ்ரீதரன், பொன்முத்து, சட்டப்பேரவை உறுப்பினா்
எஸ்.அம்பேத்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.சிவானந்தம், ஆா்.வேல்முருகன், கே.வி.ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






