இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

போளூா் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையம் ஆய்வு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 1:17 am

போளூா் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உள்ள வெண்மணி, வசூா், பால்வாா்த்துவென்றான், முருகாபாடி, கேளூா் என பல்வேறு ஊராட்சிகளில் உள்ள அரசு தொடக்க , நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைய உள்ளன.

இந்த நிலையில், வெண்மணி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா்களுக்கு ஏற்றவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம், வாக்கு இயந்திரத்துக்கு மின் இணைப்பு, வாக்காளா்களுக்கு கழிப்பறை, குடிநீா் வசதிகள், வாக்குச்சாவடி மையத்தின் மேற்கூரை பாதுகாப்பு குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ரபியுல்லா ஆகியோா் ஆய்வு செய்தனா். தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.