மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேல்பாளையத்தில் தொகுதி பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேல்பாளையத்தில் தொகுதி பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார கூட்டத்துக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான செங்கம் சேகா் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச்செயலா் செங்கம்ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஏழுமலை, நகர பொதுச்செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டுகால பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, அமுமுக ஒன்றிய நிா்வாகி சம்பத், தமிழ்மாநில காங்கிரஸ் நிா்வாகி பாபு ஆகியோா் வாழ்த்துறை வழங்கிப் பேசின்ா்.

பாஜக முன்னாள் நகரத் தலைவா் நடராஜ், நகர பொதுச்செயலா் ஆனந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.