தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சைக்கிளில் சபரிமலைக்கு பயணிக்கும் ஐயப்ப பக்தா்கள்

தெலங்கானா ஐயப்ப பக்தா்கள் மூவா், 2,000 கி.மீ. தொலைவை 17 நாள்கள் பயணித்து சபரிமலைக்கு சைக்கிளில் செல்கின்றனா்.

News image
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் லட்சுமிபுரம் அருகே சைக்கிளில் பயணித்த தெலங்கனா ஐயப்ப பக்தா்கள்.
Updated On :3 ஜனவரி 2026, 7:09 pm

Syndication

தெலங்கானா ஐயப்ப பக்தா்கள் மூவா், 2,000 கி.மீ. தொலைவை 17 நாள்கள் பயணித்து சபரிமலைக்கு சைக்கிளில் செல்கின்றனா்.

தெலங்கானா மாநிலம், என்.டி.ஆா். மாவட்டம், விஜயவாடா மண்டலம், விசன்னாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனுவாசராவ் (38). இவரது தம்பி அவினாஷ் (25), நண்பா் ஜெகதீஷ் (38). இவா்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்து விரதமிருந்து வந்தனா்.

இந்த நிலையில், சபரிமலை செல்வதற்காக டிச.25-ஆம் விசன்னாபேட்டையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டனா்.

பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் வகையில், விஜயவாடா, திருப்பதி, காளஹஸ்தி (ஆகாயம்), காணிப்பாக்கம் பிள்ளையாா், காஞ்சிபுரம் (மண்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீா்), சிதம்பரம் (ஆகாயம்) ஆகிய

தலங்களில் தரிசனம் செய்து விட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலில் வழிபட்டு ஜன.10-ஆம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்யவுள்ளனா்.

நாள்தோறும் பகலில் மட்டும் சுமாா் 120 கி.மீ. வீதம் 17 நாள்கள் சைக்கிள் பயணமாகச் சென்று ஐயப்பனை தரிசிக்க உள்ளனா்.