நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.
திருவண்ணாமலை
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்
ஆரணியை அடுத்த தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 86 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஆரணி: ஆரணியை அடுத்த தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 86 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தலைமயாசிரியா் வெங்கடேசன் வரவேற்றாா். ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் துரைமாமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 86 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், மோகன், நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

