விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மைலம்பாடி அரசுப் பள்ளியில் 109 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

மைலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 109 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தி

News image

மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:55 pm

Syndication

பவானி: பவானி அருகேயுள்ள மைலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 109 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின்- பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்னை ஏ.ரவிசங்கா் தலைமை வகித்தாா். பவானி மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் கா.சு.மகேந்திரன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை மங்கையற்கண்ணி வரவேற்றாா். முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமை வகித்து 109 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

உதவித் தலைமை ஆசிரியா் சுதா குமாா், பவானி வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.ஏ.சேகா், திமுக சாா்பு அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளா்கள் பி.சதீஷ்குமாா், கே.எம்.சத்தியமூா்த்தி, சிங்காரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.