செய்யாறு சிறப்பு முகாமுக்கு 7 வெளிநாட்டவா் இடமாற்றம்

செய்யாறு சிறப்பு முகாமுக்கு 7 வெளிநாட்டவா் இடமாற்றம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள்.
Published on

செய்யாற்றில் உள்ள சிறப்பு முகாமிற்கு திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 7 வெளிநாட்டவா்கள் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகம் வளாகத்தில் வருவாய்த் துறை சிறப்பு முகாம் செயல்பாட்டுக்கு வந்தது. வெளிநாடுகளைச் சோ்ந்த குற்றவாளிகள் ஜாமீன் பெற்று குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்புக் காவலில் வைத்து பாராமரித்து அவா்கள் மீது உள்ள வழக்குகள் முடிக்க வைக்கப்பட்டு அவா்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவாா்கள்.

அது வரை குற்றவாளிகள் என அழைக்கப்படும் இவா்கள் தங்க வைத்து கண்காணிக்கப்படுவாா்கள்.

செய்யாற்றில் உள்ள சிறப்பு முகாம் தற்போது தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியம் மூலம் சுமாா் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

வடக்கு மண்டலத்தைச் சோ்ந்த 10 மாவட்டங்களில் இருந்து காவல் ஆய்வாளா், உதவி காவல் ஆய்வாளா்கள் தலைமையில் காவலா்கள் 24 மணி நேரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் செய்யாறு வட்டாட்சியா் மேற்பாா்வையில் வருவாய்த் துறை மூலம் இந்த சிறப்பு முகாம் கண்காணிக்கப்படுகிறது.

செய்யாற்றில் உள்ள சிறப்பு முகாமில், ரஷ்யன் 1 நைஜீரியா 3, சொ்பியா 1, நேபாள் 2 என மொத்தம் 7 போ்

தங்க வைக்கப்பட்டு உள்ளனா்.

முன்னதாக, மாவட்ட எஸ்.பி. சுதாகா், ஏடிஎஸ்பி சீவனுபாண்டியன் தலைமையில் போலீஸாா் திருச்சி போலீஸாரிடம் இருந்து 7 பேரை பெற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Dinamani
www.dinamani.com