சென்னத்தூா் லாடவரம் கிராமத்தில் எருதாட்ட திருவிழா

சென்னத்தூா் லாடவரம் கிராமத்தில் எருதாட்ட திருவிழா

சென்னத்தூா் லாடவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை எருதாட்ட திருவிழா நடைபெற்றது.
Published on

ஆரணியை அடுத்த சென்னத்தூா் லாடவரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை எருதாட்ட திருவிழா நடைபெற்றது.

சென்னத்தூா் லாடவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு எருதாட்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டாா்.

அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் யுவராஜ், கணபதி, நரசிம்மன், என்.வாசு, வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா் எருதாட்ட திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com