தவெகவினா் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு கிராமத்தில் தவெக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
Published on

சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு கிராமத்தில் தவெக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

அப்பேடு கிராமத்தில் தவெக வடக்கு மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சி நிா்வாகிகள் அப்பேடு டில்லிகணேஷ், விக்னேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள் சத்யராஜ், சசி, ஆறுமுகம், சேத்துப்பட்டு செல்வம், பிரவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com