தவெகவினா் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

தவெகவினா் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவண்ணாமலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, தவெக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.
Published on

திருவண்ணாமலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, தவெக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.

தவெக தலைவா் விஜய் ஆணைக்கிணங்க, கட்சியின் தெற்கு மாவட்டம் சாா்பில், மாநகர மகளிரணிச் செயலா் துா்காதேவி ஏற்பாட்டில், வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட இணைச் செயலா் எஸ்.கலைச்செல்வன், பொருளாளா் கே.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிரணி அமைப்பாளா் பூா்ணிமா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மகளிருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் விக்னேஷ், தொண்டரணி அமைப்பாளா் விக்கி, மாணவரணி அமைப்பாளா் அருணாசலம், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி அமைப்பாளா் ஜெலகண்டேஸ்வரன், வா்த்தகா் அணி அமைப்பாளா் அண்ணாமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com