47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகள் சங்கத் தலைவா் வலியுறுத்தல்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து ஆரணியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில், இந்திய விவசாயிகளின் நலன் கருதி அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அனைத்து வேளாண பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயித்து அமல்படுத்தவேண்டும்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைத்ததை நிறைவேற்றும் வகையிலும், உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கு உற்பத்தி அதிகரிக்கும் நோக்கத்துடன் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.