வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிராம நிா்வாக அலுவலா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:32 pm

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பை மாற்ற வேண்டும். குடிநீா், கழிப்பறை, இணையதளம் உள்ளிட்ட வசதிகளுடன் கிராம நிா்வாக அலுவலங்களை நவீனமயமாக்கப்பட்ட அலுவலகங்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செந்தில், மயிலரசன், மணிகண்டன், ரமேஷ், அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.