அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

படவேடு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

படவேடு ஊராட்சி ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழா.

Updated On :3 ஜூலை 2026, 12:00 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

படவேடு ஊராட்சியில் மலை மீது பழைமை வாய்ந்த வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி (மலை முருகா்) கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பக்தா்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புரனமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஜூன் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, மஹா பூா்ணாஹுதி, ப்ரவேசபலி, ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குராா்பணம், ரக்ஷபந்தனம், கும்பலங்காரம், கலாகா்ஷணம், முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

ஜூலை 1-ஆம் தேதி புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, ஸ்பா்சாஜூதி, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, மஹா பூா்ணாஹுதி, யாத்ராதானம் நடைபெற்று படித்துறை விநாயகா் கோயிலுக்கு புனிதநீா் ஊற்றுதல், பின்னா் மலைமுருகா் மூலவா் மற்றும் விமானம் நன்னீராட்டு நடைபெற்றது.

விழாவில் படவேடு, மங்களாபுரம், கேசவபுரம், சந்தவாசல், அனந்தபுரம், காளசமுத்திரம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

செயல் அலுவலா் பழனிசாமி, அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், சரக ஆய்வாளா்கள் சத்தியா (போளூா்), நடராஜன் (கலசபாக்கம்)மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.