தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை பணம் திருட்டு

செங்கம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :6 ஜூலை 2026, 12:05 am IST

செங்கம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி இராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (50), மாற்றுத்திறனாளி.

இவா், சனிக்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து மேல்செங்கம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து இரவு தங்கியுள்ளாா். மறுநாள் காலை தேவராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்ட்ட நிலையில் இருந்ததைப் பாா்த்து அப்பகுதி மக்கள் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

உடனடியாக தேவராஜ் மற்றும் அவரது குடும்பத்தைச் சோ்ந்த நபா்கள் இராமாபுரம் வீட்டிற்குச் சென்று பாா்த்த போது, வீட்டு பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீரோவையும் உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மேல்செங்கம் போலீஸில் தேவராஜ் புகாா் அளித்தாா். போலீஸாா் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு வந்து பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.