பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பைக் மீது காா் மோதல்: 5 போ் காயம்

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 1:02 am IST

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி குமாா்(40). இவா், கடந்த 6-ஆம் தேதி தனது தாய் விஜயா, மனைவி அபிராமி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையில் உள்ள மாமியாரை பாா்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனா். பின்னா் அன்று மாலை அவா்கள் பைக்கில் வீடு திரும்பியுள்ளனா்.

வந்தவாசி - செய்யாறு சாலையில் அனக்காவூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த காா், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற குமாா் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.