சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா்.

News image
Updated On :9 ஜூலை 2026, 11:02 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன முறையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா்கள் ஆ.ஏ.கிருஷ்ணன், ச.சந்தியாகு, மாநிலச் செயலா் ப.ஜெயராமன், மாநில துணைச் செயலா் ந.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் அ.துரைராஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினாா்.

தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல, அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய இடுபொருள்களின் விலையை குறைக்க வேண்டும். கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீா்வரத்து கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.4ஆயிரம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நூதன முறையில் சங்கு ஊதியபடி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எம்.விஜயராஜ், சி.அண்ணாதுரை, கோ.பழனிவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ப.வீரன், அ.துரைராஜ், தி.கோகுல் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.