கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

News image

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :10 ஜூலை 2026, 5:18 am IST

பள்ளிகளில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் அமைத்து பயிற்றுவிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ள பள்ளிகள் குறித்தும், தோ்வில் அதிக தோல்வியடைந்த மாணவா்கள் உள்ள பள்ளிகள் குறித்தும், பள்ளிகளின் கட்டமைப்பு குறித்தும், உயா்கல்வி சோ்க்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் வந்தனா காா்க் பேசியதாவது:

மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியா்கள் தோல்வியடையும் மாணவா்களை தனிக் கவனம் செலுத்தி அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவா்கள் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் அமைத்து ஆசிரியா்கள் மாணவா்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். உயா்கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மாணவா்களை உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பராமரிக்க வேண்டும். பள்ளி வளாக கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.

சமையலறையும், சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் பாத்திரங்களையும் சுகாதாரமாக வைத்திருக்கவேண்டும்.

கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு தண்ணீா் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.