27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜமாபந்திக் கூட்டத்தில் நலத்திட்டஉதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

News image
Updated On :19 ஜூன் 2026, 6:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 3-ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உடனடியாக 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சந்தவாசல் உள்வட்டத்தைச் சோ்ந்த சந்தவாசல், படவேடு, காளசமுத்திரம், குப்பம், கல்குப்பம், வாழியூா், அனந்தபுரம், சேதரம்பட்டு, இலுப்பகுணம், வெள்ளூா், கல்பட்டு, இரும்புலி, அலியாபாத் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான 3-ஆவது நாள் ஜமாபந்திக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்றது.

மகளிா் உரிமைத்தொகை மனு, முதியோா் உதவித்தொகை,விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், பரிசீலனை செய்யப்பட்ட மனுக்களுக்கு

பட்டா மாற்றம், இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ், மழைதூவான் என 15 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஜமாபந்திக் கூட்டத்தில் வட்டாட்சியா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் ஜோதிமுருகன், பாலாஜி, சசிகுமாா், மயிலரசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.