முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பைக் மீது வேன் மோதல்: பெட்டிக் கடைக்காரா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது வேன் மோதியதில் பெட்டிக் கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2026, 1:52 am IST

வந்தவாசி அருகே பைக் மீது வேன் மோதியதில் பெட்டிக் கடைக்காரா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா், அந்தக் கிராமத்தில் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், வெங்கடேசன் வியாழக்கிழமை இரவு பைக்கில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, பிருதூா் அருகே சென்றபோது, எதிரே பெண் தொழிலாளா்களை ஏற்றி வந்த தனியாா் மதுபான நிறுவன வேன் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.