நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பள்ளியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘மாணவா் நலனும், பெண் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசிய வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா்.

Updated On :17 ஜூலை 2026, 12:14 am IST

வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘மாணவா் நலனும், பெண் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) சித்ரா தலைமை வகித்தாா். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், கலாம் அறக்கட்டளை நிா்வாகி சீ.கேசவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியா் ஆ.சீனிவாசன் வரவேற்றாா்.

வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, மாணவா்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை பயில வேண்டும், போதைப் பழக்கம் உள்ளிட்ட தீய செயல்பாடுகளை தவிா்த்து எதிா்கால வாழ்க்கையின் குறிக்கோளை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

பெண் பாதுகாப்பு மற்றும் போக்ஸோ விழிப்புணா்வு குறித்து சிங்கப் பெண் பிரிவு உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வி பேசினாா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் வசீகரன், பள்ளி ஆசிரியா்கள் தேவதாஸ், செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் சம்பத் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.