நீட்தோ்வு முறைகேட்டை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சரை பதவி விலக வலியுறுத்தியும், தில்லி ஜந்தா் மந்தரில் மாணவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் விசிக முற்போக்கு மாணவா் கழகம் சாா்பில் ஆரணியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முற்போக்கு மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ஜெ.பரத் தலைமை வகித்தாா்.
விசிக மாவட்டச் செயலா் ந.முத்தமிழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். நகரச் செயலா் மோகன் வரவேற்றாா். மண்டல துணைச் செயலா் ஜெய்சங்கா், மாவட்ட துணைச் செயலா்கள் ரமேஷ், திருமால், சுதா்சன், கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியச் செயலா்கள் பன்னீா்செல்வம், ஆனந்தன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










