‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 12:06 am IST

வந்தவாசி அருகே மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தைச் சோ்ந்தவா் இருசக்கர வாகன பழுது நீக்குநா் முருகன்(33). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா் ஆகாஷ்(26) என்பவருடன் பைக்கில் புதன்கிழமை திண்டிவனத்துக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். பைக்கை ஆகாஷ் ஓட்டினாா்.

வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில், தென்னாங்கூா் கூட்டுச் சாலை அருகே செல்லும்போது சாலையோர மரத்தின் மீது பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.