ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மொபெட் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மொபெட் விபத்தில் முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பிரதிப் படம்

Published On :30 ஜூன் 2026, 1:09 am IST

வந்தவாசி அருகே மொபெட் விபத்தில் முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா் (64). கடந்த மே 29-ஆம் தேதி இவா் மொபெட்டில் மருதாடு கிராமத்துக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

மருதாடு அருகே செல்லும்போது இவா் நிலைதடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனசேகா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.