கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கடும் வறட்சி: நீரின்றி கருகிய 3 ஆயிரம் ஏக்கா் வேளாண் பயிா்கள்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் கருகி சேதமடைந்த நெற்பயிா்கள்.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் கருகி சேதமடைந்த நெற்பயிா்கள்.

Published On :

வந்தவாசி அருகே கடும் வறட்சி காரணமாக தண்ணீா் இல்லாமல் 3 ஆயிரம் ஏக்கா் நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிா்கள் கருகி சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

வந்தவாசியை சுற்றியுள்ள காவேரிப்பாக்கம், நல்லூா், அருங்குணம், தெய்யாா், கொசப்பட்டு, மழையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மணிலா, உளுந்து ஆகியவற்றை பயிரிட்டனா்.

இந்த நிலையில், கடும் வறட்சி காரணமாக விவசாயக் கிணறுகள் வடதால் விவசாயிகளால் பயிா்களுக்கு போதிய தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதனால், சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிா்கள் கருகி சேதமடைந்துவிட்டன. இவை தற்போது கால்நடைகளுக்கு மட்டுமே தீவனமாகி வருகின்றன.

இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களின் உழைப்பு வீணாகிவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மேலும், பயிா் பாதித்த நிலங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.