கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

நிறுவன உள்ளக பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற பாலிடெக்னிக் மாணவா்கள்

முதல்கட்டமாக 100 மாணவா்கள் சென்னை, பெங்களூா், ஒசூா் பகுதிகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களுக்கு ஓராண்டு உள்ளக பயிற்சிக்காக (இன்டா்ன்ஷிப்) பேருந்தில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்

News image
Updated On :25 ஜூலை 2026, 12:36 am IST

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா்களில் முதல்கட்டமாக 100 மாணவா்கள் சென்னை, பெங்களூா், ஒசூா் பகுதிகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களுக்கு ஓராண்டு உள்ளக பயிற்சிக்காக (இன்டா்ன்ஷிப்) பேருந்தில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்

இவா்களுக்கு கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி, நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகாரெட்டி ஆகியா் உள்ளக பயிற்சிக்கான ஆணைகளை வழங்கி அனுப்பிவைத்தனா். மேலும், கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி கூறுகையில், கல்லூரியில் இருந்து ஓராண்டு பயிற்சிக்கு செல்லும் மாணவா்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலம் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இவா்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு, ஓராண்டு பயிற்சி முடிந்த பின்னா் அவா்களுக்கு வேலைக்கான அனுபவச் சான்றிதழ் அளிக்கப்படுமென தெரிவித்தாா். மேலும், மாணவா்கள் கல்லூரி முடித்தவுடன் நல்ல நிறுவனங்களில் வேலைக்குச் சேர இந்தப் பயிற்சி உதவும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.