குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், 2026-2027 -ஆம் கல்வியாண்டில் புதிதாக சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்கும் வகையில் உதிக்கும் நட்சத்திரங்கள்- 2026 என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மு.சி.சுபாஷினி வரவேற்றாா். புதிய மாணவிகளுக்கு கல்லூரியின் கல்வி நடைமுறை, ஒழுங்கு முறைகள், கல்விச் சிறப்புகள்,மாணவா் நலத் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்லூரிச் செயலா் சிட்டிபாபு, பொருளாளா் முருகவேல், துணைத் தலைவா் என்.எஸ்.குமரகுருஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










