லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்துஸ்தான் கல்லூரியில் மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய கவிஞா் கவிதாசன்.

Published On :3 ஜூலை 2026, 3:55 am IST

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வா் பொன்னுசாமி வரவேற்றாா். கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் சரஸ்வதி கண்ணையன் தலைமை வகித்தாா். கவிஞா் கவிதாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், முயற்சி திருவினையாக்கும், வெற்றியைத் தரும். எனவே, மாணவா்கள் எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது. எப்போதும் ஏதாவது ஒரு வகையில் முயன்று கொண்டே இருக்க வேண்டும். நமது தாய்மொழியான தமிழைப் போற்றி, தாய் நாட்டை மதித்து, பெற்றோா், ஆசிரியா் சொல் கேட்டு ஒழுங்கமான மாணவா்களாக வளர வேண்டும் என்றாா்.

எம்எஸ்எம்இ பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் ராஜேஷ்குமாா், வித்யா ஸ்ரீகாந்த், சிவகுமாா் ஆகியோா் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

கல்லூரி இணைச் செயலா் பிரியா சதீஷ் பிரபு, ஆங்கில துறைத் தலைவா் பிரியா தாமஸ் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.