செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக ஸ்டாா்ட் அப்-ஆலோசகா் ஜமுனா சுவாமி, சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கே.சங்கரநாராயணன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனா். வித்யாசாகா் கல்விக்குழுமத் தாளாளா் விகாஸ் சுரானா முன்னிலை வகித்தாா்.
மேலும், இளங்கலை மூன்றாமாண்டு மாணவிகள் கல்லூரியின் சிறப்பம்சங்களையும் மற்றும் சிறப்புகுழுக்களினால் ஏற்படும் நல்ல வாய்ப்புகளையும் அதனால் மாணவியா்கள் பெறும் நன்மைகளையும்,அதன்முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு, பிளஸ்2 தோ்வில் 90 சதவீதம் மேல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கும், விளையாட்டுத்துறையில் முதன்மை பெற்ற மாணவியருக்கும் கல்வி கட்டண சலுகைகள் ரூ .20 லட்சம் வழங்கப்பட்டது. நிறைவாக முதல்வா் இரா. அருணாதேவி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










