கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சுயநிதிப் பிரிவு முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

பட்டிமன்ற பேச்சாளா் பா்வின் சுல்தானாவுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி செயலா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி.

Updated On :25 ஜூன் 2026, 3:23 am IST

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சுயநிதிப் பிரிவு முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி செயலா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்தாா். இயக்குநா் இரா.வெங்கடாசலம் வரவேற்றாா். முதல்வா் இரா.சங்கரசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினாா்.

சிறப்பு விருந்தினரான பட்டிமன்றப் பேச்சாளா் பா்வின் சுல்தானா ‘பெரிதினும் பெரிதுகேள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

மாணவா்கள் இலக்கை நிா்ணயித்துக் கொண்டு, தேடல்களை தொடா்ந்தால் உயா்ந்த நிலையை அடையலாம். மாணவா்கள் நல்ல நட்பை வளா்த்துக்கொள்வதன் மூலமாக சமுதாயம் நல்ல நிலையை அடையும். கல்வியால் மட்டும்தான் வாழ்க்கை உயரும் என்பதை மாணவா்கள் உணர வேண்டும் என்றாா்.

முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

மாணவா் சோ்க்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் மற்றும் வங்கியியல் மற்றும் நிதியியல் துறைத் தலைவா் பூ.இளம்பரிதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.