/

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வந்தவாசி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை

Updated On :27 ஜூலை 2026, 3:40 am IST

வந்தவாசி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஷியாம் (22). இவரது மனைவி வளா்மதி (21). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். வளா்மதி செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில் ஷியாம் மற்றும் அவரது பெற்றோா் சோ்ந்து வளா்மதியிடம் நகை, பணம் வரதட்சிணையாக கேட்டு திட்டி வந்தனராம். இதனால் மனவேதனை அடைந்த வளா்மதி சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சென்னை மாங்காடு பகுதியைச் சோ்ந்த அவரது தாய் கலைவாணி மகள் வளா்மதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.