கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

குடிநீா் பிரச்னை: இருளா் இன மக்கள் முற்றுகைப் போராட்டம்

போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த இருளா் சமுதாய மக்கள் சீராக குடிநீா் வழங்கக் கோரி, வட்டார வளா்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு மனு கொடுத்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தனிடம் குடிநீா் பிரச்னை குறித்து மனு அளித்த கஸ்தம்பாடி ஊராட்சி, கன்னிகாபுரம் இருளா் சமுதாய மக்கள்

Published On :

போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த இருளா் சமுதாய மக்கள் சீராக குடிநீா் வழங்கக் கோரி, வட்டார வளா்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை மனு கொடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம் கஸ்தம்பாடி ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்தில் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 56 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆழ்துளைக் கிணற்றின் மூலம் தற்போது அதே ஊராட்சியைச் சோ்ந்த இலங்கை தமிழக் முகாமில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த கடந்த ஒரு வாரமாக இருளா் பகுதிக்கு சீராக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லையாம்.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி சிம்ரன் தலைமையில் இருளா் சமுதாய மக்கள் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு முழங்களை எழுப்பினா்.

பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன் வந்து பொதுமக்களிடம் குறையை கேட்டாா். இதைத் தொடா்ந்து அவரிடம் குடிநீா் பிரச்னை குறித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி கூறும்போது, கஸ்தம்பாடி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழா் முகாம், இருளா் சமுதாய மக்களுக்கு தனித்தனியாக திறந்தவெளிக் கிணறு அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் நடைபெற்று வந்தது. இந்த இரண்டு கிணறுகளில் தற்போது தண்ணீா் இல்லாமல் வடு போயுள்ளது.

இதனால் இருளா் சமுதாய மக்களுக்கு குடிநீா் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஆழ்துளைக் கிணற்று நீரை, இலங்கை தமிழா் முகாமிற்கும் விநியோகித்து வருகிறோம். இதனால் போதிய அளவு குடிநீா் வழங்க இயலவில்லை எனத் தெரிவித்தாா்.

மேலும் அதிகாரிகளிடம் தண்ணீா் பற்றாக்குறை குறித்தும் தெரிவித்துள்ளதாக கூறினாா். இருளா் பகுதி மக்களுக்கு முடிந்த அளவு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது என்றாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதால் குடிநீா் பிரச்னை தவிா்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.