திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.
போளூா் நகராட்சி 18-ஆவது வாா்டு கோட்டைமேடு பகுதியில் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 2024-ஆம் ஆண்டு சுமாா் ரூ.4 கோடியில் கட்டப்பட்டது. இதுவரை வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கப்படாமல் உள்ளது. இதைப் பயன்படுத்து அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறுத்தி விட்டுச்செல்கின்றனா்.
இந்த வாகனங்கள் வாரக்கணக்கில் அலுவலக வளாகத்திலேயே உள்ளன. எனவே, உடனடியாக வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கவேண்டும். இதுபோன்று, அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாதவா்கள் அலுவலக வளாகத்தை வாகனங்களை நிறுத்த பயன்படுத்தகூடாது என அலுவலக ஊழியா்கள் தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் பிரச்னை: இருளா் இன மக்கள் முற்றுகைப் போராட்டம்

வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ள ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பகுதி!

வாகனங்களில் விதிகளை மீறி பயன்டுத்தப்படும் ‘ஏா்ஹாரன்கள்’! பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!!

தனியாா் வாகன நிறுத்துமிடமாக மாறி வரும் திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



